மேற்குவங்க முதல்வர் மம்தா எழுதிய துர்கா பூஜை பாடல்: யூடியூப்பில் வெளியீடு

கொல்கத்தா; துர்கா பூஜைக்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எழுதிய பாடல், ஷ்ரேயா கோஷலால் பாடப்பட்டு யூடியூப்பில் வெளியிடப்பட்டுள்ளது. மேற்குவங்கத்தில் துர்கா பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொ ட்டி கடந்த 5 ஆண்டுகளாக மாநில முதல்வர் மம்தா பானர்ஜி துர்கா பூஜை தொடர்பான பாடல்களை எழுதி வருகிறார். இந்நிலையில் இந்த ஆண்டு துர்கா பூஜைக்கான பாடலையும் மம்தா எழுதியுள்ளார். இந்த பாடலை பாடகி ஷ்ரேயா கோஷல் பாடியுள்ளார். இந்த பாடலுக்கு பிரபல இசையமைப்பாளர் ஜீத் கங்குலி இசையமைத்துள்ளார்.

வங்கமொழியில் எழுதப்பட்டு இசை அமைக்கப்பட்டுள்ள இந்த பாடல் கடந்த செப்டம்பர் 27ல் வெளியிடப்பட்டது. இது நேற்று முன்தினம் யூடியூப்பில் வெளியாகியுள்ளது. பாடலுக்கு இசையமைத்துள்ள கங்குலி கூறுகையில், ‘‘வங்கமொழியில் முதல்வர் மம்தா எழுதியுள்ள இந்த பாடல் நல்லுறவை வளர்க்கும் விதமாக அமைந்துள்ளது. தீதி (அக்கா) கடந்த 5 ஆண்டுகளகாக துர்கா பூஜை தொடர்பாக பாடல் எழுதி வருகிறார். அந்த பாடல்களுக்கு நான் இசையமைத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது’’ என்றார்.

Related Stories:

>