×

காஷ்மீரில் வளர்ச்சி தொடங்கிவிட்டால் பாக்.கின் 70 ஆண்டு திட்டம் தகர்ந்துவிடும்: வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேட்டி

வாஷிங்டன்: ஜம்மு காஷ்மீரில் வளர்ச்சி தொடங்கிவிட்டால், பாகிஸ்தானின் 70 ஆண்டுக்கால திட்டம் தகர்ந்து விடும் என மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.  அமெரிக்காவில் நடந்த ஐநா பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடியுடன் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உடன் சென்றிருந்தார். கூட்டத்தை முடித்து இந்தியா திரும்புவதற்கு முன்பாக வாஷிங்டன்னில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது: காஷ்மீரில் இன்டர்நெட் சேவை முடக்கப்பட்டது குறித்து அமெரிக்க மக்கள் என்னிடம் கேட்கின்றனர். இன்டர்நெட் மற்றும் சமூகவலைதளங்களை தவறாக பயன்படுத்தி இந்திய எதிர்ப்பு சக்திகளை ஒன்றுதிரட்டுவதை தவிர்க்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்டர்நெட் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

 ஜம்மு காஷ்மீரை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்லும்போது உயிரிழப்புக்கள் ஏற்படவில்லை என்பதை உறுதி செய்வதற்காகவும் இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அங்கே எதிர்வினைகள் உள்ளன. அங்கே 70 ஆண்டுகளாக சொந்த நலன்கள் கட்டமைக்கப்பட்டுள்ளது. உள்ளூர் சொந்த நலன்கள் இருக்கிறது. எல்லையை தாண்டியும் ஆர்வம் உள்ளது. ஆனால் ஜம்மு காஷ்மீரில் வளர்ச்சி தொடங்கிவிட்டால், புரிந்து கொள்ளுங்கள், கடந்த 70 ஆண்டுகளாக பாகிஸ்தான் தீட்டிய திட்டங்கள் அனைத்தும் தகர்க்கப்பட்டுவிடும். அதன் பின்னர் மாற்றங்கள் தானாகவே நிகழும். இவ்வாறு அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா இல்லையென்றால் ஐநாவின் நம்பகதன்மை பாதிக்கும்:
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அளித்த பேட்டியில், “ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா உறுப்பினராவதற்கு நல்ல வாய்ப்பு உள்ளது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா இல்லையென்றால் அதன் நம்பகத்தன்மை பாதிக்கப்படும். 15 ஆண்டுகளில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு, பொருளாதாரத்தில் முன்னேற்றமடைந்த 3வது நாடு, ஐக்கிய நாடுகளின் முடிவெடுக்கும் அங்கத்தில் பங்கேற்காவிட்டால், அது சம்பந்தப்பட்ட நாட்டை பாதிக்கின்றது” என்றார்.

Tags : Pak ,Jaishankar ,Foreign Minister ,Kashmir ,Jaishankar Pakistan , Jaishankar, Minister of Foreign Affairs of Kashmir, Pakistan
× RELATED ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை: காவல்துறை விளக்கம்