×

திருச்சியில் ரூ.40 கோடி மதிப்புள்ள நகைகளை சுருட்டிய கொள்ளையர்களை பிடிக்க 7 தனிப்படைகள் அமைப்பு

திருச்சி: திருச்சி லலிதா ஜுவல்லரியில் கொள்ளையடித்த மர்மநபர்களை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கொள்ளை நடந்த போது பதிவான சிசிடிவி காட்சிகளை 3 தனிப்படைகள் ஆய்வு செய்யும் என்றும், நகை கொள்ளையர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. திருச்சி லலிதா ஜுவல்லரியில் 2 பேர் கொள்ளையடித்தது சிசிடிவி பதிவில் தெரியவந்துள்ளது. 2 மர்மநபர்களும் தலையில் குல்லா, முகமூடி, கை உறை மற்றும் ஜெர்கின் அணிந்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

முகமூடி அணிந்து கொள்ளையடித்த நபர்களை அடையாளம் காண்பதில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே லலிதா ஜுவல்லரி உள்ளது. இந்த கட்டிடம் மூன்று மாடிகளை கொண்டுள்ளது. வழக்கம் போல் இன்று ஊழியர்கள் முன்பக்க கதவை திறந்து பார்த்த போது கீழ் தளத்தில் இருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

கதவை உடைக்காமல் எப்படி கொள்ளையடிக்கப்பட்டது என்று பார்த்த போது தான் பின்பக்க சுவற்றில் துளையிட்டு மர்மநபர்கள் கொள்ளையடித்தது தெரியவந்துள்ளது. கீழ்தளத்தில் இருந்த நகைகள் முழுவதுமாகவும், முதல் தளத்தில் சில இடங்களில் கொள்ளை நடந்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பல கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மதிப்பு சுமார் 40 கோடி அளவுக்கு இருக்கும் தெரிகிறது.

இந்நிலையில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது முகமூடி அணிந்து 2 பேர் கொள்ளையடித்துள்ளது தெரியவந்துள்ளது. 2 மர்மநபர்களும் தலையில் குல்லா, முகமூடி, கை உறை மற்றும் ஜெர்கின் அணிந்து கொள்ளையடித்து சென்றுள்ளனர். கொள்ளையடித்த மர்மநபர்களை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.


Tags : Special Forces Organization ,robbers ,robbery ,police investigation ,Trichy Trichy ,Lalitha Jewelery , Trichy, burglary, theft, Lalitha Jewelery, police investigation, drilled robbery, jewelery robbery
× RELATED சென்னை தாம்பரம் அருகே படப்பை பஜாரில்...