×

கூடுவாஞ்சேரி - சிங்கபெருமாள்கோயில் இடையிலான 3வது வழித்தடம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும்: தெற்கு ரயில்வே பொது மேலாளர் பேட்டி

சென்னை:  கூடுவாஞ்சேரி - சிங்கபெருமாள் கோயில் இடையிலான மூன்றாவது வழித்தடம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் தெரிவித்தார்.  தெற்கு ரயில்வே பொது மேலாளராக புதிதாக பொறுப்பேற்றுள்ள ஜான் தாமஸ் சென்ட்ரல் அருகே உள்ள தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:  2019-20 நிதியாண்டில் ஆகஸ்ட் வரையில் தெற்கு ரயில்வே ஒட்டுமொத்தமாக 8 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது. இதே காலத்தில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது வருவாய் மற்றும் பயணிகள் எண்ணிக்கை 10 சதவீதம் அதிகரித்துள்ளது.   கூடுவாஞ்சேரி - சிங்கபெருமாள்கோவில் இடையிலான மூன்றாவது  வழித்தடம் விரைவில்  பயன்பாட்டுக்கு வரும். தாம்பரம் - செங்கல்பட்டு இடையிலான மூன்றாம்  வழித்தடத்திற்கு நில ஆர்ஜிதம் செய்யும் பணி விரைவில் தொடங்க  உள்ளது. இந்த வழித்தடம் அடுத்த மார்ச்  மாதத்திற்குள் பணி முடிந்து பயணிகள் பயன்பாட்டிற்கு வரும்.

கொருக்குப்பேட்டை  லெவல் கிராசிங் பிரச்னையை சீர் செய்ய மத்திய மற்றும் மாநில அரசிடம் பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது. இதற்கான பணி 15 நாளில் தொடங்கப்பட்டு ஒன்றரை ஆண்டில்  மேம்பால பணிகள் முடியும். தீபாவளிக்கு  முன்பதிவு செய்து காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை பொறுத்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். முதல்கட்டமாக 35  நிலையங்களில் சிசிடிவி கேமரா அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தப்பித்து வந்த குழந்தைகள் மற்றும் காணாமல் போன குழந்தைகள் என மொத்தம் 1048 பேர் ரயில் பாதுகாப்பு படையால் மீட்கப்பட்டுள்ளனர். அதேபோல் காணாமல் போன 34 பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர். தனியாரிடம் ரயில்களை ஒப்படைப்பதன் மூலமாக ரயில்வே துறை மேலும் மேம்படும். இதுகுறித்து கடந்த 27ம் தேதி ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் தனியார் அளிக்கப்பட  உள்ள வழித்தடத்தில்  டிராபிக்கிங் தொடர்பாக அறிக்கை தரும்படி கூறப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Tags : lane ,Guduvancheri - Singaperumalkoil ,General Manager ,Southern Railway , Between, Guduvancheri - Singaperumalkoil,Southern Railway ,General Manager
× RELATED பைக்குகளில் மதுபானம் கடத்திய 4 பேர் கைது