×

தேர்தலை போருடன் ஒப்பிட்டு பேசிய மபி எதிர்க்கட்சி தலைவர் மீது வழக்கு

போபால்: மத்தியப் பிரதேசத்தில் சட்டமன்ற இடைத்தேர்தலை இந்தியா-பாகிஸ்தான் போருடன் ஒப்பிட்டு பேசிய பாஜ.வை சேர்ந்த சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் கோபால் பார்கவா மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஜபுவா ெதாகுதி எம்எல்ஏ தாமர். இவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.  இந்த தொகுதியில் வரும் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற  உள்ளது. இம்மாநில சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரான கோபால் பார்கவா. தேர்தல் பிரசாரத்தில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.

நேற்று முன்தினம் பிரசார கூட்டத்தில் பேசிய அவர், ‘இந்த இடைத்தேர்தல் ஆளும் காங்கிரஸ் மற்றும் எதிர்கட்சியான பாஜ இடையேயான போட்டி கிடையாது. இது பாகிஸ்தான் -இந்தியாவிற்கும் இடையேயான போர் போன்றது. இந்தியா  சார்பில் போட்டியிடும் பாஜ வேட்பாளர் பானு புகுரியாவும், பாகிஸ்தான் சார்பில் காங்கிரஸ் வேட்பாளரும் போட்டியிடுகின்றனர். மக்கள் பாஜ வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும்,” என்று கூறினார். பார்கவாவின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வன்முறையை தூண்டும் வகையில் அவர் பேசியதாக  தேர்தல் அதிகாரி அளித்துள்ள புகாரை தொடர்ந்து, பார்கவா மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags : Mubi ,election war ,Mabi Sue ,War , Speaking , election war, Mabi,leader
× RELATED மபி. மருத்துவமனையில் தீ 4 பச்சிளம் குழந்தைகள் பலி