உபி.யில் பிரியங்கா பாத யாத்திரை

லக்னோ: உத்தர பிரதேசத்தில்  பாஜ முன்னாள் மத்திய அமைச்சர் சுவாமி சின்மயானந்தா மீது பாலியல் புகார் கொடுத்த மாணவிக்கு ஆதரவாக நேற்று முன்தினம் உபி மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர்கள் `நியாய யாத்திரை போராட்டம்  நடத்த முயன்றனர்.

இதையடுத்து, காங்கிரசை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜிதின் பிரசாதா, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் அஜய் குமார் லாலு வீட்டுக் காவலில் சிறை வைக்கப்பட்டனர். காங்கிரஸ் தலைவர்கள் கைதை கண்டித்து இன்று போராட்டம்  நடத்தப்பட இருந்தது.

இந்நிலையில், இன்று காந்தியின் 150வது பிறந்த நாள் நாடு முழுவதும் கொண்டாடப்படுவதால், உபி.யில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா தலைமையில் லக்னோவில் உள்ள ஷாகித் சமராக் முதல் தபால் நிலையம் பூங்கா வரை பாத  யாத்திரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>