×

புதுச்சேரி அரசு இணையதளங்களில் முதல்வரின் படம் நீக்கம்

புதுச்சேரி:  புதுவையில் காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தல் தேதி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து உடனடியாக தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. இதன் ஒருபகுதியாக அரசியல் கட்சி தலைவர்களின் படங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. தேர்தல் நடைபெறும் காமராஜர் நகர் தொகுதிக்குள் தலைவர்களின் சிலைகள் துணிகளால் மறைக்க ஏற்பாடுகள் நடக்கிறது.

இந்தநிலையில் புதுவை அரசின் பல்வேறு துறைகளின் இணையதளங்களில் முதல்வர் நாராயணசாமியின் படம் இடம்பெற்றிருந்த நிலையில், அதை உடனடியாக அகற்ற தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதையடுத்து அரசின் இணையதளங்களில் இருந்து முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்களின் படங்கள் நீக்கப்பட்டுள்ளது.

Tags : government ,Puducherry , Puducherry government, deletes image of CM
× RELATED வரும் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு : புதுச்சேரி அரசு அறிவிப்பு