×

அதிமுகவின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் : தேர்தல் ஆணையத்தில் திமுக எம்எல்ஏ மனு

சென்னை: தேர்தல் முறைகேட்டில் ஈடுபட்ட அதிமுகஅங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என திமுக எம்.எல்.ஏ சரவணன், தலைமை தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த 2016ம் ஆண்டு மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார். இதையடுத்து அ.தி.மு.க வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரி திமுக சார்பில் போட்டியிட்ட டாக்டர்.சரவணன் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்திருந்தார். இதையடுத்து மனுவை விசாரித்த நீதிமன்றம்,”ஜெயலலிதா கைரேகை தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய தடை விதித்தும் விசாரணைக்கும் தடை விதித்து உத்தரவிட்டது.

இந்நிலையில் திருப்பரங்குன்றத்தின் எம்.எல்.ஏ ஏ.கே.போஸ் மாரடைப்பால் காலமானார். இதையடுத்து இடைத்தேர்தலில் திமுக தரப்பில் போட்டியிட்ட டாக்டர் சரவணன் அதிக வாக்கு எண்ணிக்கையில் வெற்றிப்பெற்று தற்போது எம்.எல்.ஏவாக உள்ளார்.இந்த நிலையில் திமுக எம்.எல்.ஏ டாக்டர் சரவணன் தலைமை தேர்தல் ஆணையத்தில் நேற்று ஒரு புகார் மனுவை கொடுத்துள்ளார். அதில்,”அங்கீகரிக்கப்பட் கட்சிகள் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுகளையோ அல்லது சட்டங்களையோ தேர்தலின் போது நடைமுறைப்படுத்தாமல் ஏமாற்றும் வகையில் செயல்பட்டு இருந்தால், அந்த கட்சிகளின் அங்கீகாரத்தையும், சின்னத்தையும் ரத்து செய்ய இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது.

அதனால் திருப்பரங்குன்றம் தேர்தலின் போது ஜெயலலிதாவின் கைரேகையை வேட்பு மனுவில் போலியான முறையில் பயன்படுத்தப்பட்டது. இதையடுத்து அதற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது. அதனால் இதுபோன்ற முறைகேட்டை அடிப்படையாக கொண்டு அதிமுக கட்சியின் அங்கிகாரத்தை ஆணையம் ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து அவரது மனுவை பரிசீலனை செய்து தேர்தல் ஆணையம் ஒரு உத்தரவு பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் மேற்கண்ட கோரிக்கை கொண்ட மனுவை உச்ச நீதிமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Tags : DMK MLA ,Election Commission ,AIADMK , authentication of the AIADMK,DMK MLA's petition,Election Commission
× RELATED காலமானார் திமுக எம்எல்ஏ புகழேந்தி.....