×

காங்கிரஸ் சார்பில் சிவாஜி கணேசன் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

சென்னை: தமிழக காங்கிரஸ் சார்பில் சிவாஜி கணேசன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. நடிகர் சிவாஜி கணேசனின் 92வது பிறந்தநாள் நேற்று அரசு விழாவாக கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு அடையாறில் உள்ள சிவாஜி மணிமண்டபத்தில்  அவரது சிலைக்கு முன்பு வைக்கப்பட்டிருந்த அவரது உருவபடத்துக்கு தமிழக காங்கிரஸ் சார்பில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், காங்கிரஸ் கலைப்பிரிவு தலைவர் சந்திரசேகர், பீட்டர் அல்போன்ஸ், கோபண்ணா, இரா.மனோகர் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : Congress ,Birthday Celebration ,Shivaji Ganesan , Shivaji Ganesan's Birthday Celebration,Congress
× RELATED முன்மொழிந்தவர்களின் கையெழுத்தில்...