×

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் பிரசாரம் செய்ய திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சிகளின் நட்சத்திர பேச்சாளர்கள் அறிவிப்பு

சென்னை: நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சிகள் சார்பில் நட்சத்திர பேச்சாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிக்கு வருகிற 21ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, காங்கிரஸ் சார்பில் பிரசாரம் செய்ய நட்சத்திர வேட்பாளர்கள் பட்டியலை தேர்தல் ஆணையத்திடம் கட்சிகள் வழங்கியுள்ளன. அதன் விவரம் வருமாறு: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஐ.பெரியசாமி, கனிமொழி, உதயநிதி ஸ்டாலின், ஆவுடையப்பன், பொன்முடி, ஜெகத்ரட்சகன், ஏ.வ.வேலு, கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அன்பரசன், ஏ.ராஜா, கே.எஸ்.மஸ்தான், அங்கயர்கண்ணி, செல்வகணபதி, திண்டுக்கல் லியோனி, அனிதா ராதாகிருஷ்ணன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்ட 40 பேர் பெயர்கள் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

அதிமுக சார்பில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், பொன்னையன், தமிழ்மகன் உசேன், தம்பிதுரை, திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், செல்லூர் ராஜு, வைகைசெல்வன் மற்றும் அனைத்து அமைச்சர்கள் உள்பட 40 பேர் பெயர் நட்சத்திர பேச்சாளர்களாக தேர்தல் ஆணையத்திடம் வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் கே.எஸ்.அழகிரி, முகுல் வாஸ்னிக், ப.சிதம்பரம், கே.ஆர்.ராமசாமி, நாராயணசாமி, சஞ்சய் தத், தங்கபாலு, இளங்கோவன், திருநாவுக்கரசர், குமரிஅனந்தன், கிருஷ்ணசாமி, சுதர்சன நாச்சியப்பன், தனுஷ்கோடி ஆதித்தன் உள்ளிட்ட 40 பேர் நட்சத்திர பேச்சாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதுதவிர, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் நல்லகண்ணு, பாண்டியன், முத்தரசன் உள்ளிட்ட 40 பேர், தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஜி.கே.வாசன், ஞானதேசிகன், கோவை தங்கம் உள்ளிட்ட 20 பேர், நாம் தமிழர் கட்சி சார்பில் சீமான் உள்ளிட்ட 20 பேர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் கே.எம்.காதர் மொய்தீன், முகமது அபுபக்கர் உள்ளிட்ட 20 பேர், சமத்துவ மக்கள் கட்சி சார்பில் சரத்குமார் உள்ளிட்ட 20 பேர், மக்கள் தேசிய கட்சி சார்பில் சேம.நாராயணன், கணபதி உள்ளிட்ட 20 பேர், பசும்பொன் மக்கள் கழகம் சார்பில் இசக்கி முத்து உள்ளிட்ட 3 பேர் நட்சத்திர வேட்பாளர்களாக அறிவிக்கக்கோரி தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பம் செய்துள்ளனர். இவர்களின் கோரிக்கையை தேர்தல் ஆணையத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து, நட்சத்திர பேச்சாளர்கள் தேர்தல் செலவு கணக்கு வேட்பாளர் கணக்கில் வராது என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : speakers ,Congress ,AIADMK ,DMK ,parties ,constituencies ,Vikravandi , DMK, AIADMK and Congress , announce propaganda ,Nankuneri
× RELATED திமுக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் நடிகர் கமல்ஹாசன், கருணாஸ் பெயர்