×

சீன ஓபன் டென்னிஸ் 3வது சுற்றில் வோஸ்னியாக்கி

பெய்ஜிங்: சீன ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் விளையாட, டென்மார்க் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி தகுதி பெற்றார். இரண்டாவது சுற்றில் அமெரிக்காவின் கிறிஸ்டினா மிஷேலுடன் மோதிய வோஸ்னியாக்கி 6-4, 6-0 என்ற நேர் செட்களில் வென்று கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு 2வது சுற்றில் களமிறங்கிய ஜப்பான்  நட்சத்திரம் நவோமி ஒசாகா 6-2, 6-0 என்ற நேர் செட்களில் ஜெர்மனியின் ஆண்ட்ரியா பெட்கோவிக்கை எளிதாக வென்றார். அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் தனது 2வது சுற்றில் 3-6, 1-6 என்ற நேர் செட்களில் சீனாவின் சாய்சாய்  ஸெங்கிடம் தோற்று ஏமாற்றத்துடன் வெளியேறினார். முன்னணி வீராங்கனைகள் பெத்ரா குவித்தோவா (செக்.), டாரியா கசட்கினா (ரஷ்யா), ஆஷ்லி பார்தி (ஆஸி.), அலிசான் ரிஸ்கி, சோபியா கெனின் (அமெரிக்கா) ஆகியோர் கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

Tags : round ,Chinese Open , Chinese Open Tennis, Wozniacki
× RELATED ட்வீட் கார்னர்: வோஸ்னியாக்கி 30