டிச. 19ல் ஐபிஎல் ஏலம் கொல்கத்தாவில் நடக்கிறது

புதுடெல்லி: ஐபிஎல் டி20 தொடரின் 2020 சீசனுக்கான வீரர்கள் ஏலம், கொல்கத்தாவில் வரும் டிச. 19ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 85 கோடி வரை செலவு செய்ய அனுமதிக்கப்படும். இது கடந்த சீசனில் 82 கோடியாக இருந்தது. 2019 சீசன் ஏலத்தில் மிச்சம் இருக்கும் தொகையுடன் கூடுதலாக 3 கோடி செலவு  செய்யவும் வகை செய்யப்பட்டுள்ளது. இந்த வகையில், டெல்லி கேப்பிடல்ஸ் அணி வசம் அதிகபட்சமாக 8.2 கோடி மிச்சமுள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் 7.15 கோடி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 6.05 கோடி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் 5.30 கோடி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் 3.70 கோடி, மும்பை இந்தியன்ஸ் 3.55 கோடி, சென்னை சூப்பர் கிங்ஸ் 3.20 கோடி, ராயல் சேலஞ்சர்ஸ்  பெங்களூர் அணி 1.80 கோடி கையிருப்பு வைத்துள்ளன. கொல்கத்தாவில் முதல் முறையாக ஐபிஎல் ஏலம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 2021 சீசனில் அனைத்து அணிகளும் கலைக்கப்பட்டு ஒட்டுமொத்தமாக புதிய வீரர்களை தேர்வு செய்யவேண்டி இருப்பதால் ‘மெகா ஏலம்’ நடத்தப்படும்.Tags : Kolkata ,auction ,IPL , IPL Auction, Kolkata
× RELATED கன்னியாகுமரியில் வியாபாரிகள்...