வேலை வாங்கி தருவதாக கூறி இளம்பெண் பலாத்காரம் அதிமுக நிர்வாகிக்கு வலை

நெய்வேலி: கடலூர் மாவட்டம் நெய்வேலி  பெரியாக்குறிச்சி ராஜலட்சுமி திருமண மண்டபம் பின்புறம் வசிப்பவர் சிவா  மனைவி திவ்யா(27). கணவர் இறந்து விட்டதால் அவர் தனது தாய் மற்றும் இரு  குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர் மந்தாரக்குப்பத்தில் உள்ள ஜவுளி  கடையில் வேலை செய்து வருகிறார். கங்கைகொண்டான் அதிமுக நகர  செயலாளர் மனோகர் என்பவர் வேலைவாங்கி தருவதாக கூறி திவ்யாவிடம் ஆதார்  கார்டு, ரேஷன்காடு உள்ளிட்ட ஆவணங்களை எடுத்து கொண்டு தனது அலுவலகத்துக்கு  வருமாறு கூறியுள்ளார். அங்கு சென்ற அவரை பலாத்காரம் செய்ததாக  கூறப்படுகிறது.

இந்நிலையில், திவ்யா வேலைசெய்யும் ஜவுளிகடைக்கு வந்த  மனோகர் மனைவி மகா என்கிற மகாலட்சுமி திவ்யாவிடம் எனது கணவரிடம் ஏன்  பேசுகிறாய், பழகுகிறாய் என்று கூறி தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால்  அவமானம் அடைந்த திவ்யா எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவர் வாந்தி  எடுப்பதை கண்ட அவரது குடும்பத்தினர் திவ்யாவை மீட்டு உடனடியாக விருத்தாசலம்  அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து  பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து  சென்றனர். அங்கு அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த  சம்பவம் குறித்து திவ்யா மந்தாரக்குப்பம் போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில் மந்தாரக்குப்பம் போலீசார் மனோகர் மற்றும் அவரது மனைவி மகாலட்சுமி மீது  வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Related Stories:

>