×

சிதம்பரம் நடராஜர் கோயிலில் 22 அடி உயரத்தில் பிரமாண்ட கொலு

சிதம்பரம்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் நவராத்திரி விழா  நேற்று முன்தினம் முதல் நடந்து வருகிறது. இதனையொட்டி கோயிலில் உள்ள  மண்டபத்தில் பிரமாண்டமாக கொலு வைக்கப்பட்டுள்ளது. 22அடி உயரம், 18அடி  அகலம், 21 படிகளுடன் இந்த கொலு அமைக்கப்பட்டுள்ளது. இதில் சிறிய பொம்மைகள்  முதல் பெரிய பொம்மைகள் வரை 2,500 பொம்மைகள் இடம் பெற்றுள்ளது. பொம்மைகளை  சுற்றி வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. 9 தினங்கள் நடக்கும்  இந்த நவராத்திரி விழாவில் கொலு அமைக்கப்பட்டுள்ள இடத்துக்கு முன்பு உள்ள  வெள்ளி ஊஞ்சலில் சிவாகமசுந்தரி அம்பாளை எழுந்தருள செய்து பூஜைகள் மற்றும்  தீபாராதனை நடப்பது வழக்கம்.

கோயிலுக்கு வரும் பக்தர்கள் கொலுவை பார்த்து  வணங்கி செல்கின்றனர். இதுகுறித்து வெங்கடேச தீட்சிதர் கூறுகையில், நடராஜர்  கோயிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு பல ஆண்டுகளாக பிரமாண்டமாக கொலு  வைக்கப்பட்டு வருகிறது. இதில், உயிரினங்கள் முதல் மனிதன் வரை பரிணாம  வளர்ச்சிகளை விளக்கும் கொலு வைக்கப்பட்டுள்ளது என்றார்.


Tags : Chidambaram Natarajar Temple , Chidambaram Natarajar Temple, The Great
× RELATED சிதம்பரம் கோயில்: பிரமோற்சவம் நடத்தக்கோரி வழக்கு