×

திருவில்லிபுத்தூர் அருகே பூட்டி கிடக்கும் போலீஸ் செக்போஸ்ட்: சமூக விரோத செயல்கள் அதிகரிப்பு

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் அருகே, அழகாபுரியில் உள்ள போலீஸ் செக்போஸ்ட் சில தினங்களாக மூடி கிடப்பதால் சமூக விரோத செயல்கள் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே உள்ள அழகாபுரியில் போலீஸ் செக்போஸ்ட் உள்ளது. மதுரை, விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வரும் வாகனங்கள் இந்த செக்போஸ்டை கடந்து செல்கின்றன. இந்த செக்போஸ்டில் பணியில் உள்ள போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு சமூக விரோத செயல்களை தடுத்து வந்தனர்.

மேலும் சாலை விபத்துகளில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பும் பணியிலும் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த 10 நாட்களாக இந்த செக்போஸ்ட் பூட்டியே கிடக்கிறது. இதனால் இந்த சாலை வழியாக கஞ்சா, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் உள்ளிட்டவைகளை கடத்துவது அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். பொதுமக்கள் நலன் கருதி இந்த செக்போஸ்டை திறக்க வேண்டும் என காவல்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : police checkpost ,Tiruvilliputhur , Thiruvilliputtur, Police Checkpost
× RELATED கனமழை பெய்யும் என்பதால் வேதாரண்யத்தில் உப்பு ஏற்றுமதி பணிகள் தீவிரம்