×

ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை உத்தரவுக்கு தடை கோரி மனு: அதிமுக எம்.எல்.ஏ இன்பதுரை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு

சென்னை: ராதாபுரம் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிட்டதற்கு எதிராக அதிமுக எம்.எல்.ஏ இன்பதுரை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் இன்பதுரையும் திமுக சார்பில் அப்பாவுவும் வேட்பாளராக களமிறங்கினர். அப்போது இன்பதுரை 69, 590 வாக்குகளும் அப்பாவு 69 541 வாக்குகளும் பெற்றனர். 49 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவின் இன்பதுரை வெற்றி பெற்றார். இதையடுத்து வாக்கு எண்ணிக்கையின்போது 203 தபால் ஓட்டுகளை எண்ணவில்லை என திமுகவின் அப்பாவு வழக்கு தொடர்ந்திருந்தார்.

நிராகரிக்கப்பட்ட தபால் வாக்குகளை எண்ண தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என அப்பாவு கோரிக்கை விடுத்திருந்தார். அப்பாவு தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயசந்திரன் சற்று நேரத்திற்கு முன்னர் அதிரடியான உத்தரவை பிறப்பித்தார். அந்த உத்தரவில் சர்ச்சைக்குரிய 3 சுற்று வாக்கு எண்ணிக்கை, தபால் வாக்குகள் போன்ற வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும்; தபால் வாக்குகளை தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார். இது தொடர்பாக தேர்தல் ஆணையம் அதற்கான ஏற்பாடுகளை செய்கிறதா என்பது குறித்து பதிலளிக்கவும் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் நீதிபதி ஜெயசந்திரன் முன்பு அதிமுக எம்எல்ஏ சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த உத்தரவை எதிர்த்து தாங்கள் உச்சநீதிமன்றம் செல்ல வேண்டிய இருப்பதால் அந்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இது தொடர்பாக தேர்தல் ஆணையம் என்ன முடிவு எடுத்துள்ளீர்கள் என்ற கேள்வியை முன்வைத்தார். அப்போது தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்துவது சிரமம் என்றும், சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும், வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக உயர்நீதிமன்றத்திற்கு கொண்டு வர வேண்டும், எனவே இந்த நடைமுறையில் சிக்கல் உள்ளது.

எனவே கால அவகாசம் வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதி இந்த உத்தரவுக்கு தான் தடை விதிக்க அதிகாரம் உள்ளதா என்பது குறித்தும், தேர்தல் ஆணையம் கால அவகாசம் கேட்பது குறித்தும் வருகிற 3-ம் தேதி வழக்காக விசாரிப்பதாக கூறி அந்த வழக்கின் விசாரணையை 3-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

Tags : Radhapuram ,High Court ,AIADMK MLA , Radapuram, Repeat Count, Prohibition, Petition
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...