×

தமிழகத்தில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான செயல்திட்டம் எதுவும் இல்லை; ஓ.என்.ஜி.சி. விளக்கம்

காரைக்கால்: மீத்தேன், ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான செயல்திட்டம் எதுவும் இல்லை என்று ஓ.என்.ஜி.சி. விளக்கம் அளித்துள்ளது. ஓ.என்.ஜி.சி. காவிரிப் படுகை மேலாளராக பொறுப்பேற்றுள்ள அனுராக் சர்மா காரைக்காலில் பேட்டியளித்துள்ளார். தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் பல்வேறு இடங்களில் எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் எடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

இதற்காக விளை நிலங்களில் குழாய்கள் பதிக்கப்பட்டு உள்ளன. ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்ற திட்டங்களை செயல்படுத்த விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு இருந்து வருகிறது. இது தொடர்பாக பல இடங்களில் விவசாயிகள் பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

குழாய் பதிக்கும் பணியை மேற்கொள்ள வந்த அதிகாரிகளை தடுத்து நிறுத்தி விவசாயிகள் வாக்குவாதம் செய்தனர். விவசாய நிலத்தில் ஓ.என்.ஜி.சி. குழாய்களை பதிப்பதால் சம்பா சாகுபடி பாதிக்கப்படும் என்று விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர். மேலும் குழாய் பதிக்கும் உடனே தடுத்து நிறுத்த தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Tamil Nadu ,ONGC ,Anurag Sharma , Methane, Hydrocarbon, Farmers, ONGC, Anurag Sharma
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...