×

பிரதமர் மோடி - சீன அதிபர் சந்திப்புக்கான முன்னேற்பாடுகள் குறித்து நாளை மாமல்லபுரத்தில் பார்வையிடுகிறார் முதல்வர்

சென்னை: மாமல்லபுரத்தில் நடைபெற இருக்கும் பிரதமர் மோடி - சீன அதிபர் சந்திப்புக்கான முன்னேற்பாடுகள் குறித்து நாளை முதல்வர் பழனிசாமி பார்வையிடுகிறார். நட்சத்திர ஓட்டல் ஒன்றில், இரு நாட்டு வர்த்தகம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி முக்கிய ஒப்பந்தங்கள்  கையெழுத்தாக உள்ளது. வரும் 11-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை மாமல்லபுரத்தில் முகாமிடும் இரு தலைவர்களும் மகாபலிபுரத்தின் புராதன சின்னங்களையும் கண்டுகளிக்கவுள்ளனர். இரு நாட்டு தலைவர்களின் வருகையை முன்னிட்டு  மாமல்லபுரத்தில் உள்ள புராதன மையங்களில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் தார் சாலைகள் போர்க்கால அடிப்படையில் அமைக்கப்பட்டு வருகின்றன.

Tags : Modi ,Mamallapuram ,China , PM Modi , visit,China ,next week
× RELATED சொல்லிட்டாங்க...