×

தந்தையின் உடலுக்கு கண்ணீர் மல்க வீர வணக்கம் செலுத்திய 14 வயது மகள்

சென்னை: அந்தமானில் உயிரிழந்து சென்னை கொண்டுவரப்பட்ட சி.ஆர்.பி.எப். வீரரின் உடலுக்கு அவரது மகள் அஞ்சலி செலுத்தியது அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது. வாணியம்பாடியை சேர்ந்தவர் செந்தில்குமார். சி.ஆர்.பி.எப். அந்தமான் பிரிவில் தலைமை காவல் அதிகாரியாக பணிபுரிந்து வந்த இவர் எதிர்பாரத விதமாக ராட்சத கடல் அலையில் சிக்கி உயிரிழந்தார். இதையடுத்து சென்னை விமான நிலையம் கொண்டுவரப்பட்டு அவரது உடலுக்கு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது.

அப்போது செந்தில்குமாரின் மகள் ஸ்ரீதன்யா கண்ணீர் மல்க வீரவணக்கம் செலுத்திய காட்சி அனைவரையும் நெகிழச் செய்தது. செந்தில்குமாரின் உடலுக்கு சி.ஆர்.பி.எப். அதிகாரிகள் உட்பட பலர் மலர் வளையம் வைத்து தங்களது அஞ்சலியை செலுத்தினர். பின்னர் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு சொந்த ஊரான வாணியம்பாடிக்கு கொண்டு செல்லப்பட்டது.

Tags : Taraka ,Andaman ,Daughter of War Heroes ,Death Warrior ,CRPF , Andaman, CRPF Death of Warrior, Daughter of War Heroes, Military Honors,
× RELATED மராட்டிய மாநிலம் அவுரங்காபாத் அருகே தாய், தந்தை, மகள் வெட்டிப் படுகொலை