×

பலூன் சிற்பம்!

நன்றி குங்குமம்

கண்களுக்குக் குளிர்ச்சியான ஓர் இடம் ஹாங்காங். அங்கே வீற்றிருக்கும் விக்டோரியா துறைமுகத்தை ராட்சத சிற்பம் ஒன்று இன்னும் அழகு படுத்துகிறது. 115 மீட்டர் நீளம், 40 டன் எடை கொண்ட இச்சிற்பத்தை வடிவமைத்தவர் பிரையன் டொன்னெல்லி. பலூனை ஊதி பெரிதாக்குவதைப்போல காற்றடைக்கப்பட்ட சிற்பம் இது. நீரின் மேல் படுத்துக்கொண்டு வானத்தைப் பார்த்தபடி இருக்கும் இந்த சிற்பத்தைக் காண ஆயிரக்கணக்கானோர் அங்கே குவிகின்றனர். ‘‘நவீன வாழ்க்கையின் இறுக்கமான சூழலைப் பற்றித்தான் எப்போதும் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.

ஓய்வு, ஆசுவாசத்தைப் பற்றி மக்களைச் சிந்திக்கத் தூண்டும் ஒரு படைப்பை உருவாக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாகவே நினைத்து வந்தேன். தண்ணீரில் மிதந்துகொண்டு வானத்தைப் பார்ப்பதைப் போல ஆசுவாசம் வேறு என்ன இருக்கிறது இந்த உலகில்...’’ என்கிறார் பிரையன் டொன்னெல்லி. அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த இவரின் பலூன் சிற்பங்கள் கோடிகளில் ஏலம் போகின்றன. 


Tags : Hong Kong, Brian Donnelly, Balloon, Sculpture
× RELATED ஒன்றிய அரசின் வரியில்லா வர்த்தக...