×

டிச.19-ம் தேதி கொல்கத்தாவில் 2020-ம் ஆண்டுக்கான ஐபிஎல் வீரர்கள் ஏலம்; பிசிசிஐ அறிவிப்பு

மும்பை: 2020-ம் ஆண்டில் நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிக்கான ஏலம் டிசம்பர் 19-ம் தேதி கொல்கத்தாவில் நடைபெறும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களிடையே பெறும் வரபேற்பை பெற்றுள்ளது ஐபிஎல் போட்டிகள். இந்நிலையில் ஐபிஎல் தொடரின் 13வது சீசன் போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதனிடையே போட்டியில் பங்குபெறும் வீரர்களின் ஏலம் நடைபெறும் இடம் மற்றும் தேதியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

அதன்படி, இந்த ஆண்டு ஐபிஎல் ஏலம் டிசம்பர் 19-ம் தேதி கொல்கத்தாவில் நடைபெறும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. கொல்கத்தாவில் முதல் முறையாக ஏலம் விடுவது முதல் முறையாகும். 8 அணிகளின் நிர்வாகத்துக்கும் முறைப்படி ஐபிஎல் நிர்வாகம் கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில் அடுத்த ஆண்டு ஏலத்துக்கு ஒட்டுமொத்தாக ரூ.85 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு அணியும் கடந்த ஆண்டு இருக்கும் இருப்பு தொகையை விட கூடுதலாக ரூ.3 கோடி வரை பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் 2021-ம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் 5 வீரர்களை தக்கவைத்து கொண்டு மற்ற வீரர்களை ஏலத்தில் தான் எடுக்க முடியும். இதனால் அடுத்த வரும் பெரிய ஏலத்தை மனதில் வைத்துக்கொண்டு இந்த வருடம் வீரர்களை தேர்வு செய்வர்.

எந்த அணியில் எவ்வளவு தொகை;

டெல்லி கேபிடல்ஸ் அணியிடம் அதிகபட்சமாக ரூ.8.2 கோடியும், அதைத் தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் ரூ.7.15 கோடியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் ரூ.6.05 கோடியும், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியிடம் ரூ.5.3 கோடியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிடம் ரூ.3.7 கோடியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் ரூ.3.2 கோடியும், மும்பை இந்தியன்ஸ் அணியிடம் ரூ.3.05 கோடியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் ரூ.1.8 கோடியும் இருப்பு இருக்கிறது என பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : IPL ,Kolkata ,BCCI Announcement ,auction , IPL 2020 auction to be held in Kolkata on December 19
× RELATED ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கே.கே.ஆர்....