×

ஃப்ளைட் ஹோம்

நன்றி குங்குமம் முத்தாரம்

திராட்சை கொத்துகளைப் போல அழகழகாகத் தொங்கும் ஷாண்ட்லியர் விளக்குகள், கிங் சைஸ் மெத்தைகள், பளபளக்கும் கண்ணாடிச் சுவர்கள், மின்னுகின்ற தரை விரிப்புகள் ஏதோ செவன் ஸ்டார் ஹோட்டலின் சூட் ரூம் என்று நீங்கள் நினைத்துவிட வேண்டாம். இதெல்லாம் இருப்பது ப்ரூஸ் கேம்பலின் ஃப்ளைட் ஹோமில்! அமெரிக்காவின் போர்ட்லாண்ட் பகுதியில் வசித்து வரும் கேம்பல் - இன்வென்ட் எஞ்சினியராக இருந்து ஓய்வு பெற்றவர். ஓரிடத்தில் தொடர்ந்து வசிப்பது அவருக்குப் பிடிக்காத ஒன்று. சில மாதங்கள் ஜப்பானின் டோக்கியோவில் இருப்பார் அல்லது அமெரிக்காவின் ஏதாவது ஒரு காட்டுப்பகுதியில் வசிப்பார்.

சமீபத்தில் பழைய போயிங் ரக விமானத்தை வாங்கி, ஒரு வீட்டுக்கு என்னென்ன வசதிகள் தேவையோ அத்தனையும் அதில் செய்து அதை ஓர் அழகான வீடாகவே மாற்றி விட்டார். இப்போது அந்த விமான வீடு போர்ட்லாண்ட் நகரின் காட்டுப்பகுதியில் நாலாபக்கமும் மரங்கள் சூழ அமைந்திருக்கிறது. குளிர்காலத்தை அங்குதான் கழிக்கப் போகிறார்!

Tags : USA, Portland, Flight, Home,
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...