×

2016-ல் நடைபெற்ற திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் மோசடி: அதிமுக அங்கீகாரத்தை ரத்து செய்யகோரி தேர்தல் ஆணையத்தில் திமுக மனு

டெல்லி: அதிமுக அங்கிகாரத்தை ரத்து செய்ய கோரி திருப்பரங்குன்றம் திமுக சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளார். திமுக சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சரவணனன் 2016-ம் ஆண்டு நடைபெற்ற திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அப்போது, அப்பலோ மருத்துவமனையில் இருந்த முறைந்த முதல்வர் ஜெயலலிதா பெயரில் அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலைச் சின்னம் ஒதுக்கக்கோரி தேர்தல் ஆணையத்தில் கடிதம் அளிக்கப்பட்டது. ஜெயலலிதா சுயநினைவு இல்லாமல் மருத்துவமனையில் இருக்கும்போது எப்படி கடிதம் தர முடியும் என சரவணன் கேள்வி எழுப்பினார்.
 
ஜெயலலிதாவின் கைரேகை தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஜெயலலிதாவின் கைரேகை போலினாது என்று தீர்பளித்தது. இதனையடுத்து டெல்லியில் இந்திய தேர்தல் ஆணையத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர் சரவணன் அளித்த மனுவில், மோசடியில் ஈடுபட்டதால் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் அங்கீகாரத்தை ரத்து செய்யுமாறு கேட்டுள்ளார்.

Tags : Tirupatirankam ,DMK ,AIADMK , DMK petition in repeal of 2016 bypolls: AIADMK
× RELATED புதிய பேருந்துகள் வாங்கப்பட்டு...