×

பருவநிலை மாற்றத்தை அறிய உதவும் மரம்

நன்றி குங்குமம் முத்தாரம்  

கடந்த வாரம் காலநிலை எப்படியிருந்தது என்று அறிய வேண்டுமானால் கூகுளில் தட்டினால் போதும். கடந்த மாதம், கடந்த வருடம் இந்த தேதி காலநிலையைக் கூட கூகுள் தேடிக்கண்டுபிடித்துத் தந்துவிடும். ஆனால், 800 வருடங்களுக்கு முன்பு உலகின் கால நிலை எப்படியிருந்தது என்பதை அறிய கூகுளால் முடியாது.  மரத்தால் முடியும். ஆம்; 800 வருடங்களாக இங்கிலாந்தில் கம்பீராக நின்றுகொண்டிருக்கும் ஓக் மரம் பருவநிலை எப்படி மாறி வந்திருக்கிறது என்பதை அறிய உதவுகிறது என்கின்றனர் விஞ்ஞானிகள்.

அதன் வளையங்களை ஆராய்ச்சி செய்வதன் மூலமாக பருவநிலையில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன என்பதை துல்லியமாக சொல்லிட முடியும் என்கின்றனர் நிபுணர்கள். இந்த ஆராய்ச்சி இயற்கை ஆர்வலர்கள் மற்றும் பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த போராடும் போராளிகள் மத்தியில் பெரும் அதிர்வைக் கிளப்பியிருக்கிறது. ‘‘இந்த மரம் எனக்கு பெரிய பாடத்தைக் கற்றுக் கொடுத்திருக்கிறது...’’ என்கின்றனர் ஆய்வாளர்கள்.


Tags : England, climate change, tree, weather
× RELATED 21ம் தேதி ‘இந்தியா’ கூட்டணி பேரணி;...