×

தமிழர்கள் நன்றி உணர்வுள்ளவர்கள்: ஆட்சிமொழியாக தமிழை அறிவித்து பெருமைப்படுத்துங்கள்: பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: தமிழின் தொன்மை குறித்த பிரதமரின் கருத்துகளை உளமார வரவேற்றுப் பாராட்டுகிறோம் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை ஐஐடியின் 56வது பட்டமளிப்பு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த  விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள வந்திருந்தார். பிரதமர் மோடிக்கு சென்னை விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு தொண்டர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, சென்னைக்கு  வரும்போதெல்லாம் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். அமெரிக்காவில் பேசும் போது, ‘தமிழ் மொழி உலகத்திலே மிக பழமையான மொழி’ என்பதை நான் அங்கு தெரிவித்தேன். அமெரிக்க ஊடகங்கள் அனைத்திலும் இப்போது அந்த செய்தி  தான் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது என்றார்.

பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு பதக்கங்களையும், பட்டம் பெற்ற 2140 மாணவர்களுக்கு பட்டங்களையும், வழங்கினார். மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய பின்னர், பிரதமர் மோடி  பேசியதாவது: உலகின் மிகவும் பழமையான மொழி தமிழ் மொழி. உலகின் மூத்த மொழியான தமிழ் பேசும் மாநிலத்தில் நாம் இருக்கிறோம் என்றார். தமிழகத்தில் பிரதமர் மோடி தமிழ் குறித்து பேசியதற்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு  தெரிவித்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் சிதம்பரம் தொகுதி எம்.பியுமான திருமாவளவன் சென்னை ஐஐடி விழாவில் தமிழ் குறித்து பிரதமர் மோடி பேசியது மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.

இந்நிலையில், இந்தியாவின் ஆட்சிமொழியாக தமிழை அறிவித்து பெருமைப்படுத்துங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ் மொழி மீது காட்டும் ஆக்கபூர்வமான அக்கறையை  நடைமுறை செயலகத்துக்கு கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். உலகம் தழுவிய அளவில் 8 கோடிக்கும் அதிகமான மக்களால் பேசப்படும், தமிழ் மொழிக்குரிய அங்கீகாரத்தை அளிக்க வேண்டிய பொறுப்பு, பிரதமர் மோடி  தலைமையிலான அரசுக்கு நிச்சயமாக இருக்கிறது. இந்தியாவின் ஆட்சி மொழியாக தமிழைப் பெருமைப்படுத்துங்கள் என்று பிரதமர் மோடிக்கு, மு.க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழர்கள் விருந்தோம்பலுக்கு மட்டுமல்ல, நன்றி  உணர்வுக்கு நீண்ட காலமாகவே பெயர் பெற்றவர்கள் என்றார்.

Tags : Modi Stalin ,Modi , Stalin's appeal to Prime Minister Modi
× RELATED ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம்;...