×

இப்படி ஒழுகினால் எப்படி பேருந்தை இயக்குவது? அரசு பேருந்து ஓட்டுநரின் வைரலாகும் வீடியோ

மதுரை: மதுரை மாவட்டம் சோழவந்தானில் மழைநீரால் ஒழுகும் அரசு பேருந்தை எப்படி ஓட்டுவது என்று ஓட்டுநர் கேள்வி கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. சோழவந்தானில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணிமனையில் 40 பேருந்துகள் உள்ளன. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் பெரும்பாலான அரசு பேருந்துகளின் மேற்கூரையில் இருந்து மழைநீர் ஒழுகி வருகிறது.

இதில் நனைந்த படி முக்காடு போட்டுக்கொண்டு ஓட்டுநர் ஒருவர் இப்படி பேருந்து இருந்தால் எப்படி இயக்குவது என்று போக்குவரத்து அதிகாரிகளை கேள்வி கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பரவி வருகிறது. பணிமனையில் இயங்கும் அனைத்து பேருந்துகளும் முறையாக பராமரிப்பின்றி பழுதடைந்துள்ளது என்பது ஓட்டுநரின் புகார். இந்த பேருந்துகள் அனைத்தும் கிராமப்புரங்களுக்கு போக்குவரத்து சேவை வழங்கி வருகிறது.


Tags : Tamil Nadu ,Bus Driver ,Cholavantan ,Flowing State Bus , Tamil Nadu, Cholavantan, Government Bus, Rain, Flowing State Bus, Driving, Social Networks
× RELATED மதுராந்தகத்தில் அரசு பேருந்து ஓட்டுனர் கொரோனாவால் உயிரிழப்பு