டெல்லியில் கேரள முதல்வர் பினராயி விஜயன்-ராகுல் காந்தி சந்திப்பு: வெள்ள சீரமைப்பு பணி தொடர்பாக ஆலோசித்ததாக தகவல்

டெல்லி: டெல்லியில் கேரள முதல்வர் பினராயி விஜயனை வயநாடு தொகுதி எம்.பி.ராகுல் காந்தி சந்தித்து பேசினார். கேரளாவில் சமீபத்தில் பெய்த கனமழையால் வயநாடு, மலப்புரம் மாவட்டங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின. கேரளாவில்  
இதனையடுத்து, முன்னாள் காங்கிரஸ் தலைவரும், வயநாடு எம்பியுமான ராகுல்காந்தி, வெள்ளம் பாதித்த பகுதிகளை தொடர்ந்து 2-வது முறை நேரில் பார்வையிட்டார். வெள்ளத்தால் மண் சரிவு ஏற்பட்ட இடங்களை நேரில் பார்வையிட்டு  ராகுல் காந்தி ஆய்வு செய்தார். முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கினார். தொடர்ந்து மலப்புரம் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கவலப்பாறை பகுதியை பார்வையிட்டார்.

இந்நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் டெல்லி சென்றார். அங்கு தங்கி உள்ள அவரை வயநாடு தொகுதி எம்.பி.ராகுல் காந்தி சந்தித்து பேசினார். அவரது தொகுதியில் வெள்ள சீரமைப்பு பணி தொடர்பாக ஆலோசித்ததாகவும்,  தனது  தொகுதியில் வெள்ள நிவாரண பணியை துரிதப்படுத்துமாறு ராகுல் கேட்டு கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அரசியல் தொடர்பாக இருவரும் பேசியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


Tags : Rahul Gandhi ,Kerala ,Pinarayi Vijayan ,chief minister ,Delhi , Kerala Chief Minister Pinarayi Vijayan-Rahul Gandhi meets Delhi chief minister
× RELATED ஆர்எஸ்எஸ் பின்னணி கொண்ட எதையும் கேரள...