×

இந்திய அளவிலான பைக் ரேஸ்; சாதனை படைத்த சென்னையை சேர்ந்த 15 வயது சிறுவன்

சென்னை: சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் அருகே நடைபெற்ற இந்திய அளவிலான பைக் ரேஸில் 15 வயது சிறுவன் 10 போட்டிகளில் 9 முறை முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். சாதனை படைத்துள்ள சிறுவன் சென்னையை சேர்ந்த முகமது மைக்கேல் ஆவார். ஸ்ரீபெரும்புதூர் அருகே இருங்காட்டு கோட்டையில் போட்டி நடத்தப்பட்டது. கடந்த ஜுலை மாதம் தொடங்கி 10 பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்று வந்தன.

இதில் தமிழம், கேரளா, கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டு திறமைகளை வெளிப்படுத்தினர். நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில் சென்னையை சேர்ந்த முகமது மைக்கேல் முதலிடம் பிடித்தார். இவர் பந்தய தூரத்தை 1 நிமிடம் 46.3 விநாடிகளில் கடந்தார். இந்த சீசனில் நடைபெற்ற 10 போட்டிகளில் 9 போட்டிகளில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.


Tags : Bike Race ,Indian ,Chennai ,Mohammed Michael , Chennai, bike race, bike race in India, 15-year-old boy, Mohammed Michael
× RELATED பைக் ரேசில் ஈடுபட்ட 8 வாலிபர்கள் கைது