×

டிராபிக் ‘விதிமீறிய’ ரிக்‌ஷாக்காரருக்கு 18,000 அபராதம்

அகமதாபாத்: நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி, பல மடங்கு அபராத தொகை விதிக்கப்படுவது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.  இந்நிலையில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ரிக்‌ஷா தொழிலாளி ராஜூ என்பவருக்கு டிராபிக் விதிமீறலுக்காக போலீசார் 18,000 அபராதம் விதித்துள்ளனர். அபராத தொகையை கட்ட முடியாததால்  அவரது ரிக்‌ஷாவை பறிமுதல் செய்துள்ளனர். இதனால், நொந்துபோன ராஜூ தற்கொலைக்கு முயன்றுள்ளார். அருகிலிருந்தவர்கள் அவரை காப்பாற்றியுள்ளனர். ராஜூ, பிகாம் பட்டதாரி. வேலை கிடைக்காததால் வேறு வழியின்றி ரிக்‌ஷா ஓட்டி வந்துள்ளார்.  அதிலும் புதிய டிராபிக் சட்டம் மண்ணள்ளிப் போட்டுவிட்டதாக ராஜூ நொந்து போயுள்ளார்.



Tags : rickshawer ,Rickshaw taker , Tropic, Rickshawger, 18,000 fine
× RELATED காங்கிரஸ் வேட்பாளர்களுடன்...