×

100க்கும் மேற்பட்ட படகுகளில் வந்து சின்னமுட்டம் துறைமுகத்தில் நெல்லை மீனவர்கள் முற்றுகை

கன்னியாகுமரி: நெல்லை மீனவர்கள் 100க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளில் வந்து சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை முற்றுகையிட்டதால் பதற்றம் ஏற்பட்டது.  கன்னியாகுமரி சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு சுமார் 300க்கும் மேற்பட்ட விசைபடகுகளில் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இவர்களுக்கும், நெல்லை  மாவட்டம் கூத்தங்குழி மீனவர்களுக்கும் கடலில் மீன்பிடிப்பது தொடர்பாக அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்தநிலையில் சின்னமுட்டம் மீனவர்கள், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட வலைகளை வைத்து மீன்பிடிப்பதாக கூத்தங்குழி மீனவர்கள் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் நேற்று சின்னமுட்டம் மீனவர்களை கடல் வழியாக வந்து முற்றுகையிட போவதாக நெல்லை கூத்தங்குழி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் அறிவித்திருந்தனர். முன்னெச்சரிக்கை  நடவடிக்கையாக சின்னமுட்டம் மீனவர்களை நேற்று மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

அதன்படி யாரும் மீன்பிடிக்க செல்லவில்ைல. விசைப்படகுகள் துறைமுகத்தில்  நிறுத்தப்பட்டிருந்தன. பாதுகாப்பு கருதி ஏராளமான போலீசார் சின்னமுட்டத்தில் குவிக்கப்பட்டிருந்தனர். இதனிடையே நெல்லை மாவட்டம் பெருமணல், கூத்தங்குழி, கூட்டப்புளி, இடிந்தகரை, உவரி ஆகிய கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் 100க்கும் மேற்பட்ட நாட்டு படகுகளில் நேற்று காலை கடல் வழியாக  சின்னமுட்டம் மீன்பிடித்துறைமுகத்தை நோக்கி வந்து கடலில் முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பினர். இதனால் பதற்றம் ஏற்பட்டது. போலீசார் அவர்களை எச்சரித்தனர். இதனை தொடர்ந்து அவர்கள்   திரும்பி சென்றனர். இதை தொடர்ந்து கன்னியாகுமரி சின்னமுட்டம் விசைப்படகு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் துறைமுக வளாகத்தில் அவசர கூட்டம் நடத்தினர்.

பின்னர் அவர்கள் கூறும் போது, சின்னமுட்டம்  மீன்பிடித்துறை முகத்தை தங்குதளமாக கொண்டு 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டே மீன்பிடித்தொழில் செய்து வருகிறோம். எங்கள் வாழ்வாதாரத்தை  அழிக்கும் வகையில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த கட்டுமர மீனவர்கள் எங்கள் படகுகளை அழிக்க வந்தனர். இதை தடுக்க வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய விசைப்படகு உரிமையாளர்கள்  முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக கலெக்டர் எஸ்பியை சந்தித்து மனு அளிக்க உள்ளோம் என்றனர்.

Tags : Paddy fishermen ,harbor ,Chinnamuttam ,fishermen blockade ,Paddy , Boats, Chinnamuttam Harbor, Paddy Fishermen, Siege
× RELATED தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுக...