தமிழகத்தில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா, குற்றத்தின் ஆட்சியா?: மு.க.ஸ்டாலின் கேள்வி

சென்னை: “தமிழகத்தில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா, குற்றத்தின் ஆட்சியா?” என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், மணல் கொள்ளையர்கள் முதலமைச்சரின் பெயரைப் பயன்படுத்தி  அராஜகத்தில் ஈடுபட்ட செய்தி குறித்து, தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்தி: இது எடப்பாடி பழனிசாமியின் லாரி என மிரட்டும் அளவுக்கு, சமூக விரோதிகள் நடமாட்டத்துக்கு முதலமைச்சர் பெயரைப் பயன்படுத்துவது போன்ற  அராஜகம் வேறு என்ன இருக்க முடியும்?. ஆட்சி-எடப்பாடியின் கையிலா, மணல் கொள்ளையர்கள் கையிலா, தமிழகத்தில் நடப்பது சட்டத்தின்  ஆட்சியா, குற்றத்தின் ஆட்சியா?.இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.

Tags : MK Stalin ,Tamil Nadu , Walking , Tamil Nadu, The rule of law, the rule , MK Stalin
× RELATED குற்ற சம்பவங்களை தடுக்க போலீசார் ரோந்து பணி தீவிரப்படுத்தப்படுமா?