×

டிபிஐயில் சிறப்பு ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்

சென்னை: பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என்று கேட்டு டிபிஐ வளாகத்தில் சிறப்பு ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு  வருகின்றனர். இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள உடற்கல்வி, தையல், இசை, ஓவியம் உள்ளிட்ட 1325 சிறப்பு ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த  இடங்களை நேரடியாக நிரப்புவதற்காக ஆசிரியர் ேதர்வு வாரியம் கடந்த 2017 செப்டம்பர் மாதம் போட்டித் தேர்வை நடத்தியது. தேர்வு முடிவுகள்  கடந்த 2018 அக்டோபரில் வெளியானது. ஆனால், அந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்காமல் பள்ளிக் கல்வித்துறை  இழுத்தடித்து வருகிறது.
இதனால் மனமுடைந்த சிறப்பு ஆசிரியர்கள் இதுவரை 3 முறை டிபிஐ வளாகத்தில் பல நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இரவு  பகலாக அவர்கள் டிபிஐயில் தங்கி போராட்டம் நடத்திய நிலையில் ஒவ்வொரு முறையும் அவர்களை  போலீசார் கைது செய்து வெவ்வேறு  இடங்களில் இறக்கிவிட்டு விடுவார்கள். இரவு நேரத்தில் இதுபோல செய்ததால் சிறப்பு ஆசிரியர்கள் மனமுடைந்தனர். இதுதொடர்பாக கல்வி அதிகாரிகள் தரப்பில் கடந்த ஆண்டு அளிக்கப்பட்ட உறுதியின் பேரில் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபடாமல் தவிர்த்து  வந்தனர். இருப்பினும் அவர்களுக்கு நியமன ஆணைகள் வழங்கப்படவில்லை. இதையடுத்து, சிறப்பு ஆசிரியர்கள் 100க்கும் மேற்பட்டோர் நேற்று காலை டிபிஐ வளாகத்திற்கு வந்தனர். ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகம் முன்பு  அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாருக்கு தகவல் கொடுக்காமல் அவர்கள் வந்ததால் போலீசார் பதற்றம் அடைந்தனர்.  உடனடியாக சிறப்பு ஆசிரியர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் முயற்சியில் இறங்கினர். ஆனால் ஆசிரியர்கள் அங்கிருந்து போக மறுத்து  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : Special Teachers , Special ,Teachers, TBI ,Struggle
× RELATED பணி நிரந்தரம் செய்யக்கோரி பகுதி நேர ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்