×

வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் ஓய்வுபெற்றார்

சென்னை: வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் நேற்று ஓய்வுபெற்றார்.தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் கே.சத்யகோபால். ஐஏஎஸ் அதிகாரியான இவர், வருவாய் துறையில் கடந்த 3 ஆண்டுகளாக பணிபுரிந்தார். அப்போது, இந்த துறையில் புதிய பல திட்டங்களை கொண்டு வந்தார். குறிப்பாக, பேரிடர் காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது மற்றும் வெள்ளம் போன்ற பெரிய ஆபத்துக்களை வரும்முன் கண்டறிந்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் முக்கிய பங்காற்றினார்.

பேரிடர் துறைக்கு புதிய உபகரணங்களை வாங்கியதில் முக்கிய பங்காற்றினார். இதுபோன்ற ஆபத்துக்களை மக்களும் தெரிந்து கொள்ளும் வகையில் tn-smart என்ற புதிய ஆப் அறிமுகப்படுத்தி இருந்தார். வருவாய் துறையில் இ-அடங்கல் திட்டம் கொண்டு வந்தார். வருவாய் துறையின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றிய சத்யகோபால் ஐஏஎஸ் நேற்றுடன் ஓய்வு பெற்றார்.



Tags : Satyagopal ,Revenue Administration ,Catyakop Retired , Commissioner , Revenue Administration, Retired
× RELATED விண்ணப்பதாரர்களுக்கு 16 நாட்களுக்குள்...