×

கடன் பிசினஸ் வேண்டாம் அனில் அம்பானி அறிவிப்பு

மும்பை: ரிலையன்ஸ் அனில் திருபாய் அம்பானி குழும தலைவர் அனில் அம்பானி, நிறுவன ஆண்டு கூட்டத்தில் பங்குதாரர்களிடையே நேற்று உரையாற்றினார். அவர் கூறியதாவது: ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனம், கடன் வழங்கும் பணிகளில் இனி ஈடுபடாது. ரிலையன்ஸ் கமர்ஷியல் பைனான்ஸ் சிறு தொழில் கடன்களையும் ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் வீட்டு கடன்களையும் வழங்கி வந்தது. இந்த இரு நிறுவனங்களின் சொத்து மதிப்பு 25,000 கோடி. இனி ரிலையன்ஸ் கேபிடல் மேற்கண்ட இரு நிறுவனங்களிலும் பங்குகளை மட்டுமே வைத்திருக்கும். இந்த நிறுவனத்தில் சுமார் 10 லட்சம் பங்குதாரர்கள் உள்ளனர்.

கடந்த 15 மாதங்களில் இந்த குழுமம் 35,000 கோடி கடனை திரும்ப செலுத்தியுள்ளது. மேலும் 15,000 கோடி கடன் 2020ம் ஆண்டு மார்ச்சில் செலுத்தப்படும். இந்த குழுமத்துக்கு 60,000 கோடி கடன் வர வேண்டியுள்ளது. ஆனால், நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாயங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் இவற்றை மீட்க முடியவில்லை என்றார். அனில் அம்பானியின் இந்த அறிவிப்பால், மும்பை பங்குச்சந்தையில் ரிலையன்ஸ் கேபிடல் பங்கு மதிப்பு 24.20 ஆக குறைந்தது. இதே பங்கு மதிப்பு 1999ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி இருந்தது.

Tags : Anil Ambani , Anil Ambani, Business
× RELATED அந்நிய செலாவணி முறைகேடு வழக்கில்...