மருத்துவ கல்லூரி விளையாட்டு மேல்மருவத்தூரில் தொடங்கியது

சென்னை: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் மாநில அளவிலான  ‘கலிங்கா 19’ விளையாட்டு போட்டிகள் நேற்று தொடங்கியது (செப். 30 - அக். 3).   இந்தப் போட்டியில் தமிழகம் முழுவதிலும் உள்ள  மருத்துவம் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகள் பங்கேற்றுள்ளன. கிரிக்கெட், கைப்பந்து, கூடைப்பந்து, கால்பந்து, டேபிள் டென்னிஸ்,  ஓட்டப்பந்தயங்கள்,  குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல்  உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடக்கின்றன.

பங்காரு அடிகளாரின்  80வது  பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடைபெறும் இந்த தொடர் மேல்மருவத்தூரில் உள்ள ஜி.பி. விளையாட்டு திடலில் நடைபெறும். தொடக்க விழாவில் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரியின் தாளாளர் கோ.ப.அன்பழகன், ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியின் தாளாளர் கோ.ப.செந்தில்குமார், மதுராந்தகம் போலீஸ் டிஎஸ்பி மகேந்திரன், அச்சிறுப்பாக்கம்  இன்ஸ்பெக்டர் சரவணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். போட்டிக்கான ஏற்பாடுகளை மருத்துவ கல்லூரி முதல்வர் மோமன்சிங், துணை முதல்வர் கண்ணன், மூத்த நிர்வாகி லிங்கநாதன்  ஆகியோர் செய்துள்ளனர்.

Tags : Medical College Sports
× RELATED மேத்யூஸ் இரட்டை சதம் இலங்கை 515/9 டிக்ளேர்'