சீன ஓபன் டென்னிஸ் 2வது சுற்றில் பியான்கா : ஹாலெப் அதிர்ச்சி தோல்வி

பெய்ஜிங்: சீன ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட, கனடா வீராங்கனை பியான்கா ஆண்ட்ரீஸ்கு தகுதி பெற்றார். முதல் சுற்றில் பெலாரஸ் வீராங்கனை அலெக்சாண்ட்ரா சாஸ்னோவிச்சுடன் மோதிய பியான்கா (5வது ரேங்க்) 6-2, 2-6, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றியை வசப்படுத்தினார். இது அவர் தொடர்ச்சியாக பெற்ற 14வது வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு முதல் சுற்றில் களமிறங்கிய ருமேனிய வீராங்கனை சிமோனா ஹாலெப் 2-6, 3-6 என்ற நேர் செட்களில் ரஷ்யாவின் எகடரினா அலெக்சாண்ட்ரோவாவிடம் தோற்று ஏமாற்றத்துடன் வெளியேறினார். முன்னணி வீராங்கனைகள் கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்), கிகி பெர்டன்ஸ் (நெதர்லாந்து), எலிஸ் மெர்டன்ஸ் (பெல்ஜியம்), மேடிசன் கீஸ் (அமெரிக்கா), அனஸ்டேசியா பாவ்லியுசென்கோவா (ரஷ்யா) ஆகியோர் 2வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.

Related Stories:

>