×

நெற்குன்றம் பிஸ்கெட் ஏஜென்சியில் ஷட்டரை உடைத்து 18 லட்சம் கொள்ளை

சென்னை: பிஸ்கெட் ஏஜென்சி ஷட்டர் பூட்டை உடைத்து 18 லட்சம் கொள்ளை போனது தொடர்பாக 3 பேரை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். திருவள்ளுவர் அடுத்த ஏகாட்டூரை சேர்ந்த ஜெயக்குமார்(55), நெற்குன்றம், பால்வாடி தெருவில், குளிர்பானம் மற்றும் பிஸ்கெட் மொத்த விற்பனை ஏஜென்சி நடத்தி வருகிறார். ஏஜென்சியில் 20க்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்து வருகின்றனர். கடை லாக்கரில் 18 லட்சத்தை வைத்து பூட்டிவிட்டு, சாவியை மேஜை அறையில் வைத்து விட்டு நேற்று முன்தினம் சென்றார். நேற்று காலை வந்து பார்த்தபோது, கடை மெயின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் லாக்கரில் வைத்திருந்த 18 லட்சமும் திருடு போயிருந்தது.

கோயம்பேடு போலீசில் அவர் புகார் அளித்ததையடுத்து, சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், கடையின் சிசிடிவி கேமரா பதிவுகளையும் கொள்ளையர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. எனவே, கடை ஊழியர்களே திருடி இருக்கலாம் எனக் கருதி, அன்பு, மணிகண்டன் மற்றும் காவலாளி ஒருவரை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Tags : robbery ,Biscotti Agency Biscotti Agency , 18 lakh robbery , Biscotti Agency
× RELATED தொடர் கொள்ளை; 2 பேர் கைது