×

சமூக அக்கறை கொண்டவர்கள் சாலைகளில் கேமராக்கள் வைக்கலாம்: குற்ற தடுப்பு விழிப்புணர்வு முகாமில் போலீஸ் தகவல்

புதுக்கோட்டை: சமூக அக்கறை கொண்டவர்கள் தங்கள் பகுதியில் சாலை முழுவதும் கவனிக்கும் வகையில் அமராக்கள் வைக்கலாம் என பரம்பூரில் நடந்த குற்ற தடுப்பு விழிப்புணர்வு முகாமில் கூறப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே பரம்பூரில் குற்ற தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமில் டிஎஸ்பி சிகாமணி, குணசேகரன் ஆகியோர் பேசுகையில், குற்றங்களை தடுப்பதில் காவல் துறை மட்டும் கவனம் செலுத்தினால் போதாது. பொதுமக்களும் அதற்கான ஒத்துழைப்பு தர.வேண்டும்.

இப்பகுதி மக்கள் வீட்டை பூட்டிவிட்டு வெளியே செல்லும்போது, பக்கத்து வீட்டினரிடமும், காவல் துறையிடமும் தகவல் அளிக்க வேண்டும். போலீஸ் மீது முழு நம்பிக்கை வைக்க வேண்டும். இதற்காக நாங்கள் தனியாக பதிவேடு வைத்து தனிக்கவனம் செலுத்தி வருகிறோம். இப்பகுதியில் சமூக அக்கறை கொண்டவர்கள் தங்கள் பகுதியில் சாலை முழுதும் கவனிக்கும் வகையில் ஆங்காங்கே கேமராக்கள் வைக்க வேண்டும். புதிய நபர்களை கண்டால் அவர்களை நீங்கள் விசாரித்து அடையாளம் காண வேண்டும்.

முன்பின் தெரியாதவர் யாரையும் வீட்டிற்குள் அனுமதிக்க கூடாது என்றார். தொடர்ந்து இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் பேசும் போது, தங்கள் பகுதியில் பிரச்னை ஏற்பட்டால் உடனடியாக 9498100752 என்ற மொபைல் எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள் என்றனர்.இதில் துணை ஆய்வாளர்கள் வீரமணி, ஜெய, உள்பட காவல் துறையினர், பொதுமக்கள், வியபாரிகள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Tags : roads ,Crime Prevention Awareness Camp , Social concern, cameras on the roads
× RELATED சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்க புதிய பணியாளர்கள்!