×

உலகிலேயே அதிவேகத்தில் செல்லக் கூடிய பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி: இலக்‍கை துல்லியமாக அழித்ததாக டிஆர்டிஓ தகவல்

ஒடிசா: உலகிலேயே அதிவேகத்தில் செல்லக் கூடிய பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. இந்தியா - ரஷியா கூட்டு தயாரிப்பான பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை ஒலியின் வேகத்தை விட 3 மடங்கு வேகமாக செல்லும் பிரமோஸ் 2.5 டன் எடை கொண்டது. இது, 290 கிமீ தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாக தகர்க்கும். தற்போது இந்த இலக்கை 400 கிமீ வரை அதிகரிக்கும் தொழில்நுட்பத்தை இந்தியா பெற்றுள்ளது. இந்த ரக ஏவுகணையை  பொருத்துவதற்கு ஏதுவாக சுகோய் விமானத்தில் சில மாற்றங்கள் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளன.

சுகோய் விமானத்தில் பொருத்தப்படும் மிக அதிக எடை கொண்ட ஏவுகணை பிரமோஸ் ஆகும். ஏற்கனவே கடந்த 2017ல் இந்த ஏவுகணையை சுகோய் விமானத்தில் பொருத்தி இலக்கை தாக்கும் சோதனைகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளன. இந்த ஏவுகணை அவ்வப்போது மேம்படுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டு வருவது வழக்கம். இந்நிலையில் இன்று ஒடிஷா மாநிலம் சந்திப்பூர் ஏவுதளத்தில், சூப்பர்சோனிக் பிரமோஸ் ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஒரு உபகரணத்துடன் பிரமோஸ் சோதனைக்குட்படுத்தப்பட்டது.

290 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இலக்கு துல்லியமாக அழிக்‍கப்பட்டது. அதனை தொடர்ந்து ஒடிசாவில் நடந்த இந்த சோதனை வெற்றிகரமாக நடந்து முடிந்ததாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்திய விமானப்படையில் விரைவில் இடம் பெற உள்ள ரபேல் போர் விமானத்துடன் எஸ்-400 ரக ஏவுகணையும், சுகோயுடன் பிரமோசும் இணையும்பட்சத்தில் பாகிஸ்தான் விமானப்படையை காட்டிலும் இந்திய விமானப்படை பன்மடங்கு பலம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : World ,TRTO , Pramos supersonic missile, test hit, TRTO
× RELATED உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில்...