×

பொருளாதார மந்தநிலை எதிரொலி : அக்டோபர் 1ம் தேதியை வேலையில்லா நாளாக அறிவித்தது சுந்தரம் கிளேட்டன் நிறுவனம்

சென்னை: நாளை ஒரு நாள் வேளையில்லா நாளாக டிவிஎஸ் குழும நிறுவனமான சுந்தரம் கிளேட்டன் நிறுவனம் அறிவித்துள்ளது. பொருளாதார மந்தநிலையை காரணம் காட்டி, சுந்தரம் கிளேட்டன் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு லேஆப் அறிவித்துள்ளது. அக்டோபர் 1ம் தேதி உற்பத்தி ஏதும் இருக்காது என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

தொடரும் பொருளாதார மந்தநிலை


நம் நாட்டில் திடீரென பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கணக்கிடும் குறியீடுகளில் ஒன்றாக வாகன உற்பத்தியும் ஒன்று. பொருளாதார மந்தநிலையால் வாகன விற்பனை கடும் சரிவை சந்தித்துள்ளது.இதனால் பொருளாதாரத்தில் வலுவாக உள்ள நிறுவனங்களும் வாகன உற்பத்தியை சில நாட்களுக்கு நிறுத்தியுள்ளன. இதனால் அந்த நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு விடுப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

சுந்தரம் - கிளேட்டன் நிறுவன ஊழியர்களுக்கு லேஆப்

இந்நிலையில் வாகன உதிரிபாகங்களை உற்பத்தி செய்வதில் இந்திய அளவில் முன்னணி நிறுவனமான சுந்தரம் - கிளேட்டன் நிறுவனம் திகழ்கிறது. இந்நிறுவனத்தின் தொழிற்சாலை சென்னையை அடுத்த பாடி மற்றும் மகேந்திர சிட்டியில் இயங்கி வருகிறது. வாகன சந்தையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் 2 நாட்கள் வேளையில்லா நாளாக அந்நிறுவனம் அறிவித்திருந்தது. இந்நிலையில் பொருளாதார மந்தநிலையை காரணம் காட்டி, நாளை ஒரு நாள் சுந்தரம் கிளேட்டன் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு லேஆப் அறிவித்துள்ளது.

ஊழியர்களுக்கு வேலை போகும் அபாயம்

இதுதொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாடியில் உள்ள தொழிற்சாலையில் அக்டோபர் 1ம் தேதி எவ்வித உற்பத்தி நடவடிக்கைகள் நடைபெறாது. ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்டுள்ள வியாபாரத்தில் மந்த நிலை காரணமாக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தற்காலிக முடிவு தான் என்றாலும், ஒரு வேலை வியாபாரத்தில் மந்த நிலை தொடர்ந்தால் ஊழியர்களுக்கு வேலை போகும் அபாயமும் இருக்கும் என அச்சம் உருவாகியுள்ளது.

Tags : downturn ,Sundaram Clayton ,Recession ,Echoes: Sundaram Clayton Announces , Sundaram Clayton, Recession, Economy, Leap
× RELATED கிராமப்புற செழிப்பை மேம்படுத்தும்...