×

குஜராத் கலவரத்தின் போது பலாத்காரம் செய்யப்பட்ட பில்கிஸ் பானுவுக்கு 2 வாரத்தில் ரூ.50 லட்சம், அரசு வேலை வழங்க குஜராத் அரசுக்கு உத்தரவு

டெல்லி: 2002-ல் குஜராத் கலவரத்தின் போது பலாத்காரம் செய்யப்பட்ட பில்கிஸ் பானுவுக்கு 2 வாரத்தில் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. 2 வாரத்தில் குஜராத் அரசு இழப்பீடு வழங்க உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானுவுக்கு அரசு வேலை வழங்கவும் குஜராத் அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தவிடப்பட்டுள்ளது.

வழக்கின் பின்னணி

கடந்த 2002ம் ஆண்டு, கோத்ரா ரயில் எரிப்பு  சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத்தில் வன்முறை வெடித்தது. அப்போது, பில்கிஸ்  பானு என்ற பெண் 11 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் கூட்டு பாலியல்  பலாத்காரத்தில் ஈடுபட்ட 11 பேருக்கும், 2008ம் ஆண்டு ஜனவரி 21ம் தேதி  சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. ஆனால் குற்றம் சாட்டப்பட்ட  ஐபிஎஸ் அதிகாரி, 2 போலீசார், 2  மருத்துவர்கள் உள்ளிட்ட 7 பேர் விடுவிக்கப்பட்டனர்.


பில்கிஸ்  பானுவுக்கு ₹50 லட்சம் இழப்பீடு, அரசு வேலை, தங்குவதற்கு வீடு


இதனை  எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ஐபிஎஸ் அதிகாரி உள்ளிட்ட 7 அதிகாரிகளும்  குற்றவாளிகள் என்று மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் ₹5  லட்சம் இழப்பீட்டை ஏற்றுக் கொள்ள மறுத்த பில்கிஸ் பானு,  கூடுதல் இழப்பீடு கோரி  மாநில அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்றம் நீதிபதிகள், ‘‘இந்த கொடூர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பில்கிஸ்  பானுவுக்கு ₹50 லட்சம் இழப்பீடு, அரசு வேலை, தங்குவதற்கு வீடு ஆகியவற்றை  வழங்க வேண்டும்’’ என்று  குஜராத் மாநில அரசுக்கு உத்தரவிட்டனர்.


 2 வாரத்தில் ரூ.50 லட்சம், அரசு வேலை வழங்க குஜராத் அரசுக்கு உத்தரவு


ஆனால், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 5 மாதங்கள் ஆகியும் அவருக்கு எந்த நிவாரணமும் அளிக்கப்படாத நிலையில் இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் முன்னர் ஆஜரான குஜராத் அரசின் வழக்கறிஞர் துஷார் மேத்தா, இந்த தீர்ப்பு தொடர்பாக சீராய்வு செய்ய வேண்டும் என கோரினார்.இதற்கு மறுப்பு தெரிவித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் இன்னும் 2 வாரங்களுக்குள் பில்கிஸ் பானோவுக்கு அரசு வேலை, வீடு மற்றும் 50 லட்சம் ரூபாய் வழங்குமாறு அம்மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



Tags : Pilgis Banu ,riots ,Gujarat , Government Work, Gujarat Government, Compensation, Supreme Court, Pilgis Banu
× RELATED மணிப்பூர் கலவரம் தொடர்பான ஆவணப்படம்:...