×

கீழடியில் அகழாய்வு நடைபெறும் பகுதிகளில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணி தீவிரம்

சிவகங்கை: கீழடியில் அகழாய்வு நடத்தப்பட்டு வரும் பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை  அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதே வேளையில் தொல்லியல் ஆய்வை காண பொதுமக்களும், சுற்றுலாப்பயணிகளும் ஏராளமானோர் திரண்டு வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த ஜூன் 13ம் தேதி முதல் நடைபெற்று வரும் 5ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் என்பது இன்றுடன் நிறைவடைவதாக இருந்தது. இந்த நிலையில் பல்வேறு தொன்மையான பொருட்கள் கண்டறியப்பட்டுவருவதை தொடர்ந்து மேலும் இரண்டு வாரங்களுக்கு இந்த அகழ்வாராய்ச்சி பணிகள் என்பது தொடர்ந்து நடைபெறும் என தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்திருந்தார்.

இந்த பணிகள் சரியாக நடைபெற்று வரக்கூடிய நிலையில் நேற்று நள்ளிரவு பெய்த கனமழை காரணமாக இங்கு இருக்கக்கூடிய 52 அகழ்வாராய்ச்சி குழிகளும் மழைநீரால் நிரம்பியுள்ளது. அந்த மழைநீரை அகற்றம் பணியில் 110 தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி அங்கு இருக்கக்கூடிய மோட்டார் இயந்திரம் மூலமாகவும் இந்த தண்ணீரை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து இந்த தண்ணீரை முழுமையாக நீக்கிய பின்னர் அகழ்வாராய்ச்சி பணிகள் மீண்டும் நடைபெறும் என தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர். இதுவரையில் இங்கு நடைபெறும் தொல்லியல் பணிகள் மற்றும் கண்டறியப்பட்டுள்ள தொன்மையான பொருட்களை சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பார்த்துள்ளதாக தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இங்கு தண்ணீர் அகற்றும் பணிகள் நடைபெற்று இருந்தாலும் கூட, இந்த தொல்லியல் பொருட்களை கண்டறிவதற்காக தொடர்ந்து தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு வெளிமாநிலங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்துகொண்டுள்ளனர். மேலும் பள்ளி கல்லூரி மாணவ, மாணவியர்களை ஆசிரியர்கள் பாடம் கற்பிக்கும் நோக்கில் அங்கு அழைத்து செல்கின்றனர். இந்த நிலையில் தான் இது மிகுந்த ஒரு ஆர்வத்தையும், உற்சாகத்தையும் ஏற்படத்தக்கூடிய அகழ்வாராய்ச்சியாகவே இங்கு நடைபெறக்கூடிய அகழ்வாராய்ச்சி பார்க்கப்படுகிறது.


Tags : areas , Subway, excavation, area, rainwater, disposal work, intensity
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்களில்...