×

கேரளத்தில் மரடு குடியிருப்புகளை இடிக்க தடை விதிக்கக் கோரிய குடியிருப்பு வாசிகளின் கோரிக்கை நிராகரிப்பு

டெல்லி: கேரளத்தில் மரடு குடியிருப்புகளை இடிக்க தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. மரடு குடியிருப்பு வாசிகளின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

வழக்கின் பின்னணி

கொச்சி நகரின் மரடு பகுதியில் விதிகளை மீறி சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள 4 அடுக்குமாடிக் குடியிருப்புகளில் மொத்தம் 343 வீடுகள் உள்ளன. இந்த சட்டவிரோத குடியிருப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அந்தக் குடியிருப்புகளை 138 நாள்களுக்குள் இடிக்குமாறு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. மேலும், வீட்டு உரிமையாளர்களுக்கு இடைக்கால நிவாரணமாக தலா ரூ. 25 லட்சத்தை 4 வாரங்களில் அளிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

அடுக்குமாடி குடியிருப்பை எவ்வாறு இடிப்பது என்பது குறித்த அவசர ஆலோசனை கூட்டம் நேற்று கொச்சியில் அரசு தலைமை செயலாளர் டோம் ஜோஸ் தலைமையில் நடந்தது. அந்த ஆலோசனையில் முதலில் கிரேன் வைத்து இடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால் அதற்கு காலதாமதமாகும் என்பதால் வெடிகுண்டுகளை வைத்து தகர்க்க தீர்மானிக்கப்பட்டது.

கோரிக்கை நிராகரிப்பு

இந்நிலையில் கேரளத்தில் மரடு குடியிருப்புகளை இடிக்க தடை விதிக்கக் கோரி மரடு குடியிருப்பு வாசிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. ஆனால் இந்த மரடு குடியிருப்பு வாசிகளின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்த நிலையில், மனுவை தள்ளுபடி செய்தது. 


Tags : residents ,demolition ,dwellings ,Kerala , Deed, residence, Supreme Court, dismissal, Kochi, petition
× RELATED வாய்க்கால் பாலம் இடிப்பு விவகாரம்: இரவு நேரத்தில் பொதுமக்கள் போராட்டம்