×

வால்பாறையில் சிறுத்தை நடமாட்டம்

வால்பாறை: வால்பாறையை அடுத்து உள்ள ஸ்டேன்மோர் எஸ்டேட் பகுதியில் கடந்த வாரம், இருளாண்டி என்பவரின் 2 கன்றுக்குட்டிகள் மர்ம விலங்கு தாக்கி பலியானது. இந்நிலையில் குட்டியுடன் புலி அப்பகுதியில் உலா வருவதாகவும், குட்டிகளுடன் வரிப்புலியை கண்டதாகவும் சிலர் கூறியதால் பொதுமக்கள் பீதியடைந்தனர். இது தொடர்பாக வால்பாறை வனச்சரகர் உத்தரவின் பேரில் அப்பகுதியில் கேமராக்கள் பொருத்தப்பட்டது. இதில், சிறுத்தை ஒன்று கன்றுகுட்டியின் மாமிசத்தை சாப்பிடுவது பதிவாகியிருந்தது. இதையடுத்து அப்பகுதிக்கு நேற்று சென்ற வனத்துறையினர் புலிகள் நடமாட்டம் குறித்து கண்காணிக்கப்படும் என அறிவித்துள்ளனர்.

Tags : Leopard
× RELATED கோவை சின்னக்கல்லாறில் 5 செ.மீ. மழை பதிவு..!!