×

சென்னை வந்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்: நாட்டு நலனுக்காக கடுமையாக உழைப்போம்...பாஜக வரவேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு

சென்னை: சென்னை ஐஐடியில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தடைந்தார். சென்னை ஐஐடியில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க ஒரு நாள் பயணமாக இன்று பிரதமர் நரேந்திரமோடி சென்னை வந்தார்.  இந்திய விமானப்படை தனிவிமானத்தில் காலை 6.50 மணிக்கு டெல்லியிலிருந்து புறப்பட்ட பிரதமர் மோடி காலை சென்னை பழைய விமான நிலையம் வந்து சேர்தார். அங்கு பிரதமருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி  பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தமிழக அமைச்சர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். சென்னை பழைய விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக கிண்டி ஐஐடி வளாகத்திற்கு அமைக்கப்பட்டுள்ள சிறப்பு  ஹெலிபேடில் வந்து இறங்குகிறார். பின்னர் அங்கிருந்து ஐஐடி வளாகத்துக்கு புல்லட் புரூப் காரில் செல்கிறார்.

ஐஐடி நிகழ்ச்சியை முடித்துவிட்டு மீண்டும் காரில் ஐஐடியில் இருந்து ஹெலிபேட்டுக்கு வந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பகல் 12.55 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வருகிறார். அங்கு அவருக்கு வழியனுப்பு நிகழ்ச்சி  நடக்கிறது. வழியனுப்பும் நிகழ்ச்சி முடிந்த பின்பு இந்திய நேரப்படி பகல் 1.20 மணிக்கு சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார். சென்னை விமான நிலையம் ஏற்கனவே தீவிரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக உச்சக்கட்ட  பாதுகாப்பான ரெட்  அலார்ட்டில் உள்ளது. தற்போது பிரதமரின் வருகையை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சென்னை பழைய விமான நிலையம் முழு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதற்கிடையே, பிரதமர் நரேந்திர மோடிக்கு சென்னை விமான நிலையத்தில் தமிழக பாஜக சார்பில் வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, சென்னை வந்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.  அமெரிக்காவில் பேசும் போது உலகின் பழமையான மொழி, தமிழ் என்பதைத் தெரிவித்தேன். உலக நன்மைக்காகவும் நாம் உழைக்க வேண்டும்,.நாம் நாட்டு நலனுக்காக கடுமையாக உழைப்போம், ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பயன்பாட்டை நிறுத்த வேண்டும். காந்தியின் 150-வது ஆண்டு விழாவில் பாத யாத்திரை மேற்கொள்ள இருக்கிறோம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்,ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், ஹச்.ராஜா, வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


Tags : Chennai ,nation ,speech ,reception ,BJP , Chennai, Majesty, National Welfare, BJP Reception, PM Modi
× RELATED திராவிட மொழிகள் குறித்து கால்டுவெல்...