×

திண்டிவனம் அருகே அரசு பள்ளியில் புகுந்து ஆசிரியர் மீது தாக்குதல்

திண்டிவனம்: திண்டிவனம் அருகே அரசு பள்ளியில் புகுந்து மாணவிகளிடம் கேலி, கிண்டல் செய்து ரகளையில் ஈடுபட்ட 3 வாலிபர்கள், தட்டிக்கேட்ட ஆசிரியரையும் உருட்டுக்கட்டையால் சரமாரி தாக்கப்பட்டார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த அகூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 500 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அதே பகுதியைை சேர்ந்த சமூக விரோதிகள் குடிபோதையில் அவ்வப்போது பள்ளியில் புகுந்து மாணவிகளிடம் ஆபாசமாக பேசியும், கேலி செய்தும் வருகின்றனர். இதுபற்றி காவல் நிலையத்தில் புகார் அளித்தால் ஆசிரியர்களுக்கு சம்பந்தப்பட்ட நபர்கள் கொலை மிரட்டல் விடுவது தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் பள்ளியில் என்.எஸ்.எஸ். சிறப்பு முகாம் நடந்தது. அப்போது அதே பகுதியை சேர்ந்த கலிம் (22), சிவா (23), சந்தோஷ் (22) ஆகியோர் பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்து மாணவிகளிடம் ஆபாசமாக பேசி உள்ளனர். இதையடுத்து, ஆசிரியர் விஜயன், அவர்களை வெளியே செல்லும்படி கூறியுள்ளார். அப்போது மூவரும்  அசிங்கமாக பேசி விஜயனை உருட்டுக்கட்டையால் சரமாரி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். மேலும் அரசு பணியை செய்யவிடாமல் தகராறு செய்து ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.இதுகுறித்து வெள்ளிமேடுபேட்டை போலீசார் வழக்குபதிந்து ஆசிரியரை உருட்டுக்கட்டையால் தாக்கிய கலிம், சிவா, சந்தோஷ் ஆகிய 3 பேரையும் தேடி வருகின்றனர்.


Tags : Teachers Into Government School Near Tindivanam Teacher ,Near Tindivanam Attack , Tindivanam, Attack , Teacher
× RELATED நீலகிரி வனப்பகுதியில் துப்பாக்கி...