அதிமுக நிர்வாகி ஆலைக்கு வங்கி வைத்த சீல் உடைப்பு

குலசேகரம்: குமரி  மேற்கு மாவட்ட அதிமுகவில் முக்கிய பொறுப்பு வகிக்கும் ஒருவருக்கு சொந்தமான  முந்திரி ஆலை ஒன்று நல்லவிளையில் உள்ளது.  இங்கு 100 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். முந்திரி ஆலையின்பேரில் மார்த்தாண்டத்தில் உள்ள வங்கி  ஒன்றில்  ₹30 லட்சம் கடன் பெறப்பட்டுள்ளது. ஆனால் கடன்  தொகையை திருப்பி செலுத்தவில்லை. இதையடுத்து 2 நாட்களுக்கு ஆலைக்கு வங்கி அதிகாரிகள் சீல் வைத்து சென்றனர். ஆனால், நேற்று முன்தினம் அந்த  முந்திரி ஆலையின் சீல் உடைக்கப்பட்டு வேறு பூட்டு போட்டு  பூட்டப்பட்டிருந்தது. தகவல் அறிந்த வங்கி ஊழியர்கள்  சம்பவ இடம் விரைந்து வந்து பார்த்தபோது சீல்  உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சம்பவம் குறித்து வங்கி  மேலாளர் திருவட்டார் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

Tags : Bank sealing ,plant ,AIADMK ,executive plant bank , AIADMK ,executive , Bank holding, Seal breakage
× RELATED தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற கோரி கடாட்சபுரத்தில் செடி நடும் போராட்டம்