×

குற்றாலம் மெயினருவியில் வெள்ளப்பெருக்கு

தென்காசி:  குற்றாலத்தில் இந்த ஆண்டு சீசன் காலம் நிறைவடைந்த பிறகும் சாரல் நன்றாக பெய்வதும், அருவிகளில் தண்ணீர் நன்றாக விழுவதுமாக உள்ளது. கடந்த மூன்று தினங்களாக இதமான சூழல் நிலவி வருகிறது. நேற்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது சாரலும் இடையிடையே சற்று மழையும் பெய்தது. இதன் காரணமாக அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாதுகாப்பு வளைவின் மீது தண்ணீர் விழுந்தது. இதனால் மதியம் 2 மணி அளவில் பாதுகாப்பு கருதி மெயின் அருவியில் மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர். ஐந்தருவி, புலியருவி, சிற்றருவி ஆகியவற்றிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. பழைய குற்றால அருவியில் ஓரளவு தண்ணீர் விழுகிறது. நேற்று விடுமுறை தினம் என்பதாலும், பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை என்பதாலும் சுற்றுலா பயணிகள் அலைமோதினர். மெயினருவியில் தடை காரணமாக ஏமாற்றமடைந்த அவர்கள், பழைய குற்றாலம் மற்றும் ஐந்தருவிக்கு சென்று காத்திருந்து குளித்தனர்.



Tags : stream ,Courtallam , Flooding ,Courtallam ,stream
× RELATED விமானத்தில் பயணம் செய்த மாநகராட்சி பள்ளி மாணவர்கள்