×

மருந்தாளுநர், நர்சிங்தெரபி படிப்புக்கு இன்று முதல் அக்.25 வரை விண்ணப்பம் பெறலாம்: ஓமியோபதித்துறை அறிவிக்கை

சென்னை: ஒருங்கிணைந்த மருந்தாளுநர் மற்றும் நர்சிங்தெரபி படிப்புக்கான விண்ணப்பம் இன்று முதல் பதிவிறக்கம் செய்து அக்டோபர் 25ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இது குறித்து ஓமியோபதி துறை வெளியிட்டுள்ள அறிவிக்கை:ஒருங்கிணைந்த மருந்தாளுநர் மற்றும் நர்சிங்தெரபி பட்டயப்படிப்புகளும் கடந்த 2008ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி பாளையங்கோட்டை மற்றும் சென்னையில் அமைந்துள்ள அரசு ஆயுஷ் பாராமெடிக்கல் பள்ளிகளில் 2019-20ம்  ஆண்டிற்கான இரண்டரை ஆண்டுகால ஒருங்கிணைந்த மருந்தாளுநர் மற்றும் நர்சிங்தெரபி பட்டயப் படிப்புகளில் பயில மேல்நிலைப்பள்ளி தேர்வில் முதன் முறையாகவே அறிவியல் பாடங்களை எடுத்து தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும், விருப்பமுள்ள நபர்கள் மேற்கண்ட படிப்புகளுக்கான விண்ணப்பம் மற்றும் தகவல் தொகுப்பினை இந்திய முறை மருத்துவ கல்லூரிகளின் விவரம் மற்றும் விண்ணப்பக் கட்டணம், படிப்பின் விவரம், அடிப்படைத் தகுதி, கல்விக் கட்டணம்  மற்றும் பிற விவரங்களுக்கு www.tnhealth.org என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். மேலும் விண்ணப்ப படிவம் இன்று முதல் அக்டோபர் 25ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்டு அக்டோபர் 25ம் தேதி மாலை 5.30 மணிக்குள் வழங்க வேண்டும்.

Tags : Pharmacists ,Pharmacist ,Omopathic Department Announcement , Pharmacist, study, Nursing Therapy, Omopathic Department ,
× RELATED கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க...