×

தனியாக வசித்த மூதாட்டி மரணத்தில் திருப்பம் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டது அம்பலம்: பக்கத்து வீட்டு வாலிபர் கைது

பெரம்பூர்: கொடுங்கையூர் முத்தமிழ் நகர் 4வது பிளாக் 96வது தெருவை சேர்ந்தவர் விமலா  (68) இவரது, கணவர் கோவிந்தன் இறந்துவிட்டார். விமலாவுக்கு  இரண்டு மகன் மற்றும் இரண்டு மகள்கள்  உள்ளனர். இவர்கள் திருமணமாகி தனித்தனியாக வசிக்கின்றனர். இதனால், விமலா மட்டும் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த 15ம் தேதி விமலா வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தகவலறிந்து வந்த கொடுங்கையூர் போலீசார், விமலாவின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், வயது முதிர்வு காரணமாக விமலாவுக்கு அடிக்கடி மயக்கம் வரும் என அவரது மகன்கள் தெரிவித்தனர்.  இதனால், மயங்கி விழுந்து இருந்ததாக காவல் துறையினர் கருதினர்.  

இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன், ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து விமலாவின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தது. இதில், விமலா கழுத்து நெரிக்கப்பட்டு இறந்ததாக குறிப்பிடப்பட்டு இருந்தது. போலீசார் விசாரணை யில்,  விமலாவின் பக்கத்து வீட்டில் வசிக்கும் சுதாகர் (34) என்பவர், விமலா இறந்த நாள் தலைமறைவானது தெரியவந்தது. அவரை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் கொடுங்கையூர் எழில் நகர் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் பாரில் மது அருந்திக்கொண்டு இருந்த சுதாகரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், கடந்த 14ம் தேதி இரவு மது போதையில் விமலா வீட்டிற்கு சென்ற சுதாகர், அங்கு தூங்கிக் கொண்டிருந்த விமலாவை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அப்போது, விமலா அலறி கூச்சலிட்டதால், அச்சத்தில் அவரது கழுத்தை பிடித்து இறுக்கியுள்ளார்.

  இதில், விமலா மூச்சுத்திணறி இறந்துள்ளார்.  இதையடுத்து, விமலா உடையை சரி செய்துவிட்டு, சுதாகர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். மறுநாள் போலீசார் வந்து விசாரணை செய்து விட்டு இது இயற்கை மரணம் என கூறியது தெரிந்து, நிம்மதியாக இருந்ததும், போலீசார் விசாரணையில் சிக்கியதும் தெரிந்தது.  சுதாகருக்கு திருமணமாகி, அவரது மனைவியை 10 ஆண்டுகளாக பிரிந்து உள்ளார். தற்போது, சுதாகர், அவரது  அப்பா அம்மாவுடன் வசித்து வந்துள்ளார், என்பதும் தெரியவந்தது.இதையடுத்து, போலீசார் கொலை மற்றும் கற்பழிப்பு முயற்சி போன்ற பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, சுதாகரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.


முதல்தடவை எச்சரிக்கை

கைது செய்யபட்ட சுதாகர் ஏற்கனவே ஒருமுறை கொலையான விமலாவிடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது, விமலா அவரை கடுமையாக கண்டித்து உள்ளார். சுதாகரின் பெற்றோர்கள் கேட்டு கொண்டதால் விமலா போலீசில் புகார் தராமல் இருந்துள்ளார்.


Tags : grandfather ,death , Latest,Grandmother's ,Death
× RELATED மாஸ்கோவில் நடைபெற்ற இசை...